தமிழிசையினைப் பரப்பும் நோக்கத்துடன் ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் 12 நாட்களுக்கு தமிழிசை விழா நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் தலை சிறந்த இசைக் கலைஞர் ஒருவரைத் தேர்ந்து "இசைப்பேரறிஞர்" என்னும் விருதும், பொற்பதக்கம், பொன்முடிப்பும் இசை விழா தொடக்க நாளன்று அளிக்கப்பெறுகிறது.