| |
தமிழிசைக் கல்லூரி நூலகத்தில் கீழ்க்கண்ட பிரிவுகளின் வரிசையில் 3000-க்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன.
- இலக்கியம்
- சிற்றிலக்கியம்
- இலக்கணம்
- இசைத் தமிழ் நூல்கள்
- நாட்டுப்புறப் பாடல்கள்
- கவிதைகள்
- தேவார திருப்பதிகங்கள்
- சமய நூல்கள்
- இசை ஆராய்ச்சி நூல்கள்
- இசை இலக்கிய மேதைகளின் வாழ்க்கை வரலாறு
- சரித்திர நாயகர்களின் வரலாறு
- உலக வரலாறு
- சமய ஆதீனங்களின் அறிக்கைகள்
- நினைவு மலர்கள்
- கட்டுரைகள்
- அறிவியல் நூல்கள்
- கலைகள் (சிற்பம், சித்திரம், நாட்டியம்)
- நாடக நூல்கள்
- தாள நூல்கள்
- சட்ட நூல்கள்
- பொதுவான நூல்கள்
- பண்ணாராய்ச்சி முடிவுகளும் தொகுப்புகளும்
- தமிழ் இசைக் சங்க ஆண்டு மலர்கள், பருவ இதழ்கள்
- சாஸ்திர வேதங்களும்
- நாவல்கள்
- பண்ணாராய்ச்சி நூல்கள் 50
- திருவாசகம்
- திருப்புகழ்
மேலும் சில அரிய நூல்களாவன
- கருணாமிருத சாகரம்
இந்நூலை இயற்றியவர் மு.ஆபிரகாம் பண்டிதர். இசைத் தமிழ் வரலாற்றையும் ஒலித் தத்துவத்தையும் கூறும் நூலாகும். - பஞ்ச மரபு
இதனை எழுதி
யவர் அறிவனார். இந்நூல் வாச்சிய மரபு, தாள மரபு, நிருத்திய மரபு, இசை மரபு, அவிநய மரபு என்ற ஐந்து மரபுகளை விவரித்துக் கூறும் நூலாகும்.
- யாழ் நூல்
இந்நூலை எழுதியவர் விபுலானந்தர். இசைத் தமிழிற்குரிய நுணுக்கங்களைத் தெரிவிக்கும் கருவியான யாழைப் பற்றி முழுமையாக அறியக்கூடிய நூலாகும்.
- சிலப்பதிகாரத்து இசை நுணுக்கம்
எழுதியவர் சங்கீதபூஷணம் எஸ்.ராமநாதன். அரும்பதவுரை ஆசிரியரும் அடியார்க்குநல்லாரும் கூறிய கருத்துக்களை ஆய்வு செய்து எழுதிய நூலாகும்.
- சுருதி வீணை
எழுதியவர் விபுலானந்தர். இந்நூலில் ஒலிகளின் ஒலிப்புகளையும் அதிர்வுகளையும் தனித்தன்மையையும் பரிவு சப்த அலைகள் பற்றியும் விளக்கப்பட்டுள்ளது.
- பூர்வீக சங்கீத உண்மை
நாகசுர வித்வான் மதுரை எம்.கே.எம்.பொன்னுசாமிப்பிள்ளை அவர்களால் எழுதப்பட்டது. பன்னிரண்டு ஒலி நிலைகளை வைத்து 32 பாலைகள்தான் இசைத் தமிழுக்கே உரித்தானது என்று பல சான்றுகளைக் கூறி நிறுவி உள்ளார்.
|