|
உலகமொழிகளுள்
தமிழ் மொழி
மிகத் தொன்மை
வாய்ந்தது.
அவ்வாறே
தமிழ்
இசையும்,
முத்தமிழும்
இந்த
நாட்டில்தான்
2000
ஆண்டுகளுக்கு
முன்பிருந்தே
நன்கு
வளர்ந்த்து
வருவன.
தமிழிற்கு
பழைய
இலக்கணமாக
அமைந்த
தொல்காப்பியம்
குறிஞ்சி,
முல்லை,
மருதம்,
நெய்தல் பாலை
போன்ற
நிலங்களுக்குரிய
யாழ் பற்றிக்
கூறுகிறது.
இசை பற்றிய
நூல்களுள்
மறைந்தன போக
எஞ்சியவற்றுள்
பரிபாடலில்
பாடல்
இசைத்தோர்
அவற்றிற்குரியப்
பண்
அமைத்தோர்
போன்ற
செய்திகள்
கிடைக்கின்றன.
அடுத்த
கி.பி.2-ஆம்
நூற்றாண்டில்
இயற்றப்பெற்ற
சிலப்பதிகாரம்
ஒரு இசைச்
சுரங்கம்.
இதில் இசை
மற்றும்
நாட்டியம்
பற்றிய
நுணுக்கங்கள்
மிகுதியும்
காணப்படுகின்றன.
பல
நூற்றாண்டுகட்குப்
பின்னர்
சிலப்பதிகாரத்திற்குப்
பொருள் கண்ட
அடியார்க்கு
நல்லாரும்
அரும்பதனாரும்
இசை /
நாட்டியம்
பற்றி
ஏராளமான
குறிப்புகளை
அளித்திருக்கின்றனர்.
3-ஆம்
நூற்றாண்டில்
காரைக்கால்
அம்மையாரும்
7, 8, 9-ஆம்
நூற்றாண்டுகளில்
திருஞானசம்பந்தர்
-
திருநாவுக்கரசர்
(அப்பர்) -
சுந்தரர்,
மணிவாசகர்
அருளிய தேவார,
திருவாசகமும்
பண்களைக்
கொண்டு
அமைந்தன.
பன்னிரு
ஆழ்வார்களின்
திவ்வியப்பிரபந்தப்
பாடல்கள் பண்
முறைகளில்
அருளிச்
செய்யப்பெற்றவையே.
கர்ணாமிர்தசாகரம்
இயற்றிய
தஞ்சை
ஆபிரகாம்
பண்டிதரும்,
யாழ் நூலினை
இயற்றிய
விபுலாநந்தரும்,
கூத்த நூல்,
பஞ்ச மரபு,
பத்துப்பாட்டு,
எட்டுத்தொகை
போன்ற
நூல்களினை
அடிப்படையாகக்கொண்டு
ஆய்ந்து
தமிழ்
இசையின்
சிறப்பையும்
தொன்மையையும்
நிலை
நாட்டியுள்ளனர்.
நம் சங்கம்
இவையனைத்தையும்
கருத்தில்
இருத்தி
தற்போது
தமிழிசை
அடைந்துள்ள
மாற்றங்களை
விளக்குவதை
நோக்கமாகக்
கொண்டு
அனுபவமும்
புலமையும்
மிக்க பல
ஓதுவாமூர்த்திகளையும்,
இசைவல்லுநர்களையும்,
தமிழ்
அறிஞர்களையும்
ஆராய்ச்சியாளர்களையும்
அழைத்து 1949-ஆம்
ஆண்டு
தொடங்கி
ஆண்டுதொறும்
டிசம்பர்
மாதம் 22, 23, 24, 25
தேதிகளில்
பண்
ஆரய்ச்சிக்
கூட்டத்தினை
ஏற்பாடு
செய்து
வருகிறது.
ஆராய்ச்சியில்
நடைபெறும்
உரைகள்,
விளக்கங்கள் -
கேள்விகள்,
மறுப்புகள்,
ஒப்புதல்
போன்ற
அனைத்தும்
பதிவு
செய்யப்பெற்று
அறிக்கை
வடிவில்
வெளிவரச்
செய்து
வருகிறது. இவ்
அறிக்கைகள்
ஆராய்ச்சிக்
கூட்டத்தில்
பங்குபெறும்
அத்தனை
பேருக்கும்
வழங்கப்
பெறுகிறது.
ஆராய்ச்சிக்
கூட்டம்
நடைபெறச்
செய்வதற்கும்
அறிக்கைகள்
வெளியிடச்
செய்வதற்கும்
பெரும்
பொருள்
செலவாவதை
அனைவரும்
அறிவர்.
சிலப்பதிகார
உரையில் 11991
பண்கள்
குறிப்பிடப்பட்டுள்ளன.
இவற்றிலிருந்து
தோன்றிய -
பிங்கல
நிகண்டு
கூறும் 103
பண்களை தேவார
திவ்வியப்பிரபந்தப்
பாடல்களில்
கூறப்படும்
பண்களுடன்
ஒப்பிட்டு
ஆய்வு
செய்வதுடன்
தற்காலத்தில்
இப்பண்களுக்கு
இணையான
இராகங்களைக்
கண்டறிந்து
அறிவிக்கும்
பணியினை
இப்பண்ணாராய்ச்சிக்குழு
தன் தலையாய
பணியாக
மேற்கொண்டு
வருகிறது.
இதுவரை
நடைபெற்ற பண்
ஆராய்ச்சிக்
கூட்டங்களின்
வாயிலாகப்
பின்வரும்
பண்கள் ஆய்வு
செய்யப்பட்டு
அவற்றிற்கு
இணையான
இராகங்கள்
எவை என
பின்வருமாறு
அறிவிக்கப்பட்டுள்ளன. |